இணையத்தில் வெளியானது ஷங்கரின் ஐ – அதிர்ச்சியில் ஷங்கர்..!

463

vikramவிக்ரம் – எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் ´ஐ.´பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை இண்டர்நெட்டில் பல இணையதளங்களில் ரிலீஸ் ஆகி, ஷங்கரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பொதுவாக ஷங்கர் படம் என்றாலே கதையை உதவி இயக்குனர்கள் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்படும். ஆனால் இந்த படத்தின் விரிவான கதை இணையத்தில் வெளியாகியுள்ளதால் ஷங்கர் அதிர்ச்சியில் உள்ளார். இனி கதை என்ன என்பதை பார்போமா?

கதைப்படி சேரிப்பகுதியில் வசிக்கும் இளைஞராக வருகிறாராம் விக்ரம். உடற்பயிற்சியில் ஆர்வம் கொண்ட விக்ரம், ஜிம்மிற்குச் சென்று உடலைக் கட்டுமஸ்தாக முறுக்கேற்றுகிறார்.

மாடலிங் பெண்ணான எமி ஜாக்சன், விக்ரம் செல்லும் ஜிம்மிற்கு அருகில் உள்ள பெண்கள் ஜிம்மிற்குச் செல்கிறார். இருவரும் எதார்த்தமாக அங்கு சந்தித்துக் கொள்ள, பதார்த்தமாக பற்றிக் கொள்கிறது காதல். பிறகென்ன, தமிழ் சினிமாவின் வழக்கப்படி எமியின் அண்ணன் சுரேஷ் கோபிக்கு இவர்களின் காதல் தெரிய வருகிறது. எல்லா அண்ணன்களைப் போல சுரேஷ் கோபியும் காதலுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

அந்த சமயத்தில் மிகப்பெரிய அளவில் ´ஆணழகன் போட்டி´க்கான அறிவிப்பு வருகிறது. அதில் கலந்து கொள்ள விரும்பும் விக்ரம், போட்டிக்காக இரவு – பகலால ஜிம்மிலேயே பழியாகக் கிடந்து உடற்பயிற்சி செய்கிறார்.

அப்போது சயின்டிஸ்டான சுரேஷ் கோபி சற்று வித்தியாசமாகச்(?) சிந்திக்கிறார். விக்ரம் – எமியின் காதலுக்கு பச்சைக்கொடி காண்பிப்பது போல நடிக்கிறார். போட்டியில் வெற்றிபெற தான் உதவுவதாகச் சொல்லும் சுரேஷ் கோபி, விக்ரமுக்கு ஒரு ஊசி போடுகிறார். அந்த ஊசி விக்ரமின் உடலைச் சிதைத்து, ஸ்லிம் விக்ரமாக மாற்றுகிறது.

இதனால்,போட்டியில் கலந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார் விக்ரம். இந்த நேரத்தில், வேறு ஒருவரை எமிக்கு மாப்பிள்ளையாகப் பேசிமுடிக்கிறார் சுரேஷ் கோபி. சுரேஷ் கோபியின் கபடத்தை உணரும் விக்ரம், வெகுண்டு எழுந்து தன் உடலை பழையபடி முறுக்கேற்றி போட்டியில் ஜெயிப்பதுடன்,எமியையும் கைப்பிடிக்கிறார்.