சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது அமுலில் உள்ள நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க இணங்கினால் மட்டுமே ஜனாதிபதி வேட்பாளராக சஜித்தை நியமிக்க முடியும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஜே.ஆர். ஜயவர்தனவைத் தவிர்ந்த ஏனைய அனைத்து ஜனாதிபதிகளும் தாங்கள் கட்சித் தலைவர்களாக இல்லாத காலத்திலேயே ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிட்டுள்ளனர்.
அதேபோன்று சஜித் பிரேமதாசவிற்கும் சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்,
ரணில் கட்சித் தலைமைப் பதவியை வகிக்கின்ற போது, சஜித் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதில் சிக்கல்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.





