கெட்டப்பை மாற்றிய சிவகார்த்திகேயன்..!

473

sivaமெரினா’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சிவகார்த்திகேயன், அதன்பிறகு நடித்த ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்கள் வரை சும்மா ஊரை சுற்றிக்கொண்டு திரியும் பையனாகத்தான் நடித்திருந்தார். அதனால் அவருக்கான கெட்டப்பில் பெரிய அளவில் எந்த மாற்றமும் செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை.

ஆனால், இப்போது ஹன்சிகாவுடன் அவர் நடித்து வரும் மான்கராத்தே படத்தில் வழக்கத்தில் இருந்து மாறுபட்டு டீசன்டான பையனாக நடிக்கிறாராம். அதனால் அவரது ஹேர் ஸ்டைல், காஸ்டியூம் என்று எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறார்களாம். கூடவே ஹன்சிகாவுக்கு இணையாக அவரது கெட்டப்பில் பிரமாண்டம் தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு பந்தாவான பையனாக அணிகலன்களைக்கொண்டே பக்காவாக மாற்றியிருக்கிறார்களாம்.

அதனால், பாடல் காட்சிகளில் மட்டுமின்றி, கேசுவலான காட்சிகளிலும்கூட ஹன்சிகாவுக்கு பொருத்தமான நடிகராக தன்னை புதுப்பித்துள்ளார் சிவகார்த்திகேயன். மேலும், விஜய்யின் துப்பாக்கியில் நடித்த வில்லன் வித்யுத் ஜாம்வாலே இப்படத்திலும் வில்லனாக நடிக்கிறாராம். அவருக்கும்,சிவகார்த்திகேயனுக்கும் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளதாம்.