ஆசிரியர்களுக்காக உயிரைவிட்ட இரண்டு மாணவர்கள்!!

581

lotus

அம்பாறை மஹஒயா பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள ஆசிரியர் தினத்திற்கு குளத்தில் தாமரை இலைபறிக்கச் சென்ற 13 வயது மாணவர்கள் இருவர் குளத்தில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக மஹஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

மஹஓயா இத்தபொல வில்லதலாவ குளத்தில் நேற்று மாலை 04 மணியளவில் தாமரை இலைபறித்தபோது குளத்தில் தவறி விழுந்த மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் மீட்கப்பட்டு மஹஓயா மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அஞ்சன பிரியசாந்த மற்றும் தில்ஷான் பிரபாத் குமார என்ற மாணவர்களே உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
மஹஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்