நிர்வாண பூஜைக்கு அழைத்த போலி சாமியார் : பெண் எடுத்த துணிச்சல் முடிவு!!

581

திருச்சி மேலபுலிவார்டு பகுதியைச் சேர்ந்தவர் கவிதா(36). எலக்ட்ரிக் கடை நடத்தி வந்த இவருக்கு, நஷ்டம் ஏற்பட்டதால், தூத்துக்குடியை சேர்ந்த தனது உறவினர் மாரியப்பன் என்பவரை அணுகியுள்ளார்.

அப்போது அவர் சில பூஜைகள் செய்தால் இது எல்லாம் சரியாகிவிடும் என்று கூறி, திருச்சிக்கு சென்று சில பூஜைகள் செய்துள்ளார்.

அதன்பின் மாரியப்பன் செய்து வந்த ஷிப்பிங் தொழிலில் கவிதாவை பங்குதாரராக சேர்த்துக்கொள்வதாகவும் கூறியதால், கவிதா 5 லட்சம் ரூபாய் பணத்தை மாரியப்பனிடம் கொடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தொழில் மேலும் உச்சமடைய வேண்டும் என்றால் தேக சுத்தி, நிர்வாணபூஜை நடத்த வேண்டும் என்றும் பூஜையின் முடிவில் தன்னுடன் நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கவிதா, தான் கொடுத்த 5 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். பணத்தை தரமறுத்த மாரியப்பன், கவிதாவுக்கு நேரிலும், போன் மூலமும் கொலை மிரட்டல் விடுத்ததால், அவர் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

பொலிசில் புகார் கொடுத்தால், மாரியப்பன் தலைமறைவாகியுள்ளார். தலைமறைவாகிய மாரியப்பனை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் மாரியப்பன் திருச்சியில் பதுங்கியிருப்பது பொலிசாருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து அவனை கைது செய்தனர்.

விசாரணையில் மாரியப்பன் போலி சாமியார் என்பதும், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இதுபோல மோசடிகளில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.