டயகமவில் பஸ் குடைசாய்ந்து 28 பேர் படுகாயம்!!

682

 
டயகமவிலிருந்து போடைஸ் ஊடாக ஹட்டன் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று குடைசாய்ந்ததில் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

டயகம ஹட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் குறித்த பஸ் தலைகீழாக குடைசாய்ந்துள்ளது.

டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு அட்டன் பகுதிக்கு சென்ற குறித்த பஸ் இன்று (04) மாலை பாதையை விட்டு விலகி சுமார் 80 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

பஸ் சாரதி கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 28 பேரில் 6 பேர் பேராதெனிய வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாற்றப்பட்டவர்களில் பெண் ஒருவர், நான்கு ஆண்கள், ஒரு குழந்தை என வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர்.