வவுனியா இன்று (07.11) அதிகாலை முதல் சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
பெற்றோர்களை அழித்து சைட்டத்தை பாதுகாப்பதா? ரணில் – மைத்திரி தீர்வு உன் கையில்! என்பதாக பிரசுரங்களில் காணப்படுகின்றது.
இப் பிரசுரத்திற்கு அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டுக்குழு உரிமை கோரியுள்ளது.
வவுனியா நகர பகுதிகள், பேருந்து நிலையம், குருமன்காடு போன்ற பல்வேறு பகுதிகளில் இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.












