கை வெட்டப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!

749

 
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் பெண்ணின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்ட பெண் பழனியான்டி சின்னம்மா 63 வயதுடையவர் என பொகவந்தலாவை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் இடது கை வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் சடலம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் சந்தேகங்கள் காணப்படுவதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு சடலம் தொடர்பில் ஹட்டன் நீதிமன்ற நீதவான் மரண விசாரணையை நேரில் வருகைதந்து மேற்கொண்டதன் பின்னர் சட்டவைத்திய பிரேத பரிசோதணைக்காக சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.