வட மாகாண சபை ஐ.ம.சு.மு உறுப்பினர்கள் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம்!!(படங்கள்)

596

வட மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஏழு உறுப் பினர்களும் முஸ்லிம் காங்கிரஸின் ஒரு உறுப்பினரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர். அலரிமாளிகையில் நேற்று பிற்பகலில் இது தொடர்பான நிகழ்வு நடைபெற்றது.

ஐ.ம.சு. முவின் பட்டியலில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன், ஈ.பி.டி.பி. சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள கந்தசாமி கமலேந்திரன், வவுனியா மாவட்டத்தில் வெற்றிபெற்ற ஏ.வி. தர்மபால செனவிரட்ன மற்றும் ஏ.ஜயதிலக்க,

மன்னார் மாவட்டத்தில் தெரிவான ரிப்கான் பதியுதீன், கிளிநொச்சி மாவட்டத்தில் வெற்றிபெற்ற ஈ.பி.டி.பி. உறுப்பினர் வை.நவநாதன், முல்லைத்தீவில் வெற்றிபெற்ற அஹமட் லெப்பை முஹமட் ஜனுபர் ஆகிய ஏழு பேருடன் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற ஹபிபூ முஹமட் ராசிக்குடன் சேர்ந்து எட்டுப் பேர் நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

வட மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களான எட்டுப்பேரும் கடந்த 08 ம் திகதி ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்க இருந்த போதிலும், அந்த வைபவம் ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 2