பாதாள அறையில் அடைத்து ஊனமுற்ற இளம்பெண் பலாத்காரம் : 84 வயது முதியவர் கைது!!

553

abuseஇங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டர் நகரை சேர்ந்தவர் இலியாஸ் அஸ்கார் (84). இவர் பாகிஸ்தானை சேர்ந்த 10 வயது சிறுமியை இங்கிலாந்துக்கு கடத்தி வந்தார். அவள் ஊனமுற்றவள். காது கேளாத, வாய் பேச முடியாதவள். அவளை தனது வீட்டில் பாதாள அறையில் அடைத்து வைத்தார்.

இவரும் அவரது மனைவி தால்லட் அஸ்கர் (68) மற்றும் அவர்களது நண்பர்கள் கடுமையாக வேலை வாங்கினர். அவள் தப்பி செல்லாமல் இருக்க வீட்டின் பாதாள அறையில் அடைத்து சிறை வைத்தனர். மேலும் ஊனமுற்ற இவளை காட்டி அரசிடம் இருந்து 30 லட்சம் சலுகைகளை பெற்றுள்ளனர்.

இதற்கிடையே அந்த சிறுமியை இலியாஸ் அஸ்கர் பல தடவை கற்பழித்து சித்ரவதை செய்துள்ளார். அவளை அவரது குடும்பத்தினர் அடித்து உதைத்து துன்புறுத்தினர். தற்போது அந்த சிறுமிக்கு20 வயதாகிறது.

இதற்கிடையே பாதாள அறையில் அடைத்து கொடுமைப்படுத்தப்பட்ட அந்த சிறுமி மீட்கப்பட்டாள். அதை தொடர்ந்து இலியாஸ் அஸ்கர், அவரது மனைவி தல்லாட் அஸ்கர், மகள் பாயிஷா அஸ்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது மன்செஸ்டர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த விசாரணையின் முடிவில் இவர்கள் 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.