வவுனியாவில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பொது அறிவு வினாடி வினாப்போட்டி!!

1387

 
வவுனியா மாவட்ட சமூகசேவைத்திணைக்களம் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு அரச மற்றும் அரசசார்பற்ற மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே நெல்லி ஸ்ராரின் அனுசரனையுடன் பொது அறிவு வினாடி வினாப்போட்டியை நேற்று 25.11.2017 (சனிக்கிழமை) மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் நடத்தினர்.

வவுனியா மாவட்ட செயலகம், ஓகான் நிறுவனம், சேவ் அக்ற் நிறுவனம், இணையும் கரங்கள் நிறுவனம், செட்டிகுள பிரதேசசெயலகம், வவுனியா வடக்கு பிரதேச செயலகம், மாவட்ட பொது வைத்தியசாலை, விவசாய அபிவிருத்தி திணைக்களம், நைட்டா நிறுவனம், தேசிய தொழில் பயிற்சி அதிகார சபை, விவசாயக்கல்லூரி, தமிழ் விருட்சம், செவிப்புலனற்றோர் சங்கம் போன்றன போட்டிகளில் கலந்து கொண்டன.

கால் இறுதிப்போட்டிக்கு வவுனியா பொது வைத்தியசாலை, வவுனியா வடக்கு பிரதேசசெயலகம், செட்டிகுள பிரதேச செயலகம், வவுனியா மாவட்டச் செயலகம், விவசாயக்கல்லூரி, விவசாய அபிவிருத்தி திணைக்களம், நைட்டா நிறுவனம், சேவ் அக்ற் நிறுவனம் ஆகியன தெரிவாகின.

கால் இறுதிப்போட்டிகள் 28.11.2017 காலை 9 மணிக்கு மாவட்ட சமூகசேவை அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

போட்டிகளை மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன் நடாத்தினார். அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் செல்வி தி.கலைவாணி, எஸ்கே.வசந்தன, செல்வி டிலானி ஆகியோர் நடுவர்களாகக் கடமையாற்றினர்.