பெற்ற குழந்தையை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை: காரணம் என்ன?

586

பெற்ற குழந்தைக்கு விஷம் ஊட்டி கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள ஷெனாய்நகர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (30). இவர் மனைவி பிரியா (26). தம்பதிக்கு தன்வந்த் (3) என்ற மகளும், 11 மாத ஆண் குழந்தையான வசீகரனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் ஏழுமலை வழக்கம் போல வேலைக்கு சென்றார். வீட்டில் பிரியாவும் இரண்டு பிள்ளைகளும் இருந்த நிலையில் வீட்டு உரிமையாளர் வீட்டு கதவை வெகுநேரம் தட்ட அவர் திறக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த உரிமையாளர் இது குறித்து பொலிசுக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டு கதவை உடைத்து பார்த்த போது படுக்கையில் வசீகரன் மற்றும் பிரியா ஆகிய இருவரும் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர்.

தன்வந்த் அழுதபடி நின்று கொண்டிருந்தான். இதையடுத்து இரண்டு சடலங்களையும் பொலிசார் கைப்பற்றிவிட்டு ஏழுமலைக்கு தகவல் கொடுத்தனர். பொலிசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பிரியாவுக்கு 2 குழந்தைகளும் அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளதும், இதனால் அவர் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

ஏழுமலை தனது மனைவி மற்றும் குழந்தைகளை நன்றாகவே கவனித்து வந்துள்ளார். ஆனாலும், பிரியா எதற்காக குழந்தையை கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்டார் என்பது புரியாத நிலையில் பொலிசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.