வவுனியாவில் இன்று (19.12) காலை 9.30 மணியளவில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வுகள் வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள கிராம அபிவிருத்தித்திணைக்கள கேட்போர் கூடத்தில் வன்னி மாவட்ட மனித உரிமைகள் இணைப்பாளர் சட்டத்தரணி ஆர் எல்.வசந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கிருபாகரன், முதன்மை விருந்தினர்களாக வவுனியா பிரதேச செலயாளர் கா.உதயராசா, வடமாகாண சமூகசேவைகள் பணிப்பாளர் திருமதி வனஜா, ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர், சமுதாய பிரிவினர், மாணவர்கள், அரச ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.























