பேஸ்புக் மூலம் மாணவர்களை தொடர்பு கொள்ள ஆசிரியர்களுக்கு தடை!!

607

FBஜேர்மனியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையே எந்தவித பேஸ்புக் தொடர்புகளும் இருக்க கூடாது என அந்நாட்டு கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார்.

மேற்கு ஜேர்மனியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இடையே எந்தவித பேஸ்புக் தொடர்பும் இருக்க கூடாது என கல்வி அமைச்சர் ரீன்லாண்ட் பாலடினேட் புதிய சட்டமொன்றை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநில தரவு கமிஷனர் எட்கர் வாக்னர் பள்ளிகளில் பேஸ்புக் பயன்படுத்துவது என்பது வணிக ரீதியில் பொருந்தும் என்றும் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடையே இந்த தொடர்புகள் வேறு வழிகளில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.

மேலும் மற்ற ஜேர்மன் மாநிலங்களில் இந்த தொடர்பானது நிறுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார். ஜேர்மனில் ரீன்லாண்ட் ஆட்சியில் தான் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடையே நட்பு தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.