யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆறுகால்மடம் பழம் வீதியிலுள்ள வீட்டில் வசிக்கும் தங்கராசா சரத்பாபு (வயது 29) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபர் மதுபோதையில் தினமும் மனைவியை கொடுமைப்படுத்தி வருவதாகவும், மனைவியின் உறவினர்களே இவர்களை படுகொலை செய்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கொலைச் சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர்.





