மட்டக்களப்பில் சிறுவர் தற்கொலை வீதம் அதிகரிப்பு..!

514

suicideமட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்யும் வீதம் அதிகரித்து காணப்படுவதாக மட்டு. போதனா வைத்தியசாலை சிறுவர் உளநல வைத்திய நிபுணர் டாக்டர் சித்ரா கலமநாதன் தெரிவித்தார்.

நேற்று தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உளவியல் செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12வயது சிறுவர்களுக்கு மத்தியில் தற்கொலை வீதம் அதிகரித்துக் காணப்படுகின்றது.

நல்ல குணமுள்ள பிள்ளைகளாக உருவாவதற்கான முழுமையான பொறுப்பு பெற்றோர்களிடமே உள்ளது.

இன்று சிறுவர்கள் பாலியல் உள்ளிட்ட பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 17வயதில் சிறுமிகள் கர்ப்பம் தரித்தவர்களாக மாறுகின்றார்கள்.

பெற்றோர்கள் சிறுவர்களின் உரிமைகளை அறிந்து அவர்களை சமூகத்தில் நல்ல பிரஜைகளாக உருவாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.