புலிகள் உறுப்பினர்களுக்கு கல்லறை அமைக்கவோ, அஞ்சலி செலுத்தவோ முடியாது – யாழ்.தளபதி ஹத்துருசிங்க..!

602

hatuஇலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கோ அல்லது அதன் உறுப்பினர்களுக்கோ நினைவுத் தூபிகளோ, கல்லறைகளோ அமைக்க அனுமதிக்க முடியாது. என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியான மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான செயற்பாடுகளை எந்தவொரு ஜனநாயக அரசாங்கமும் அனுமதிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

அல்கொய்தாவின் தலைவர் ஒஸாமா பின்லேடனை அமெரிக்கா சுட்டுக் கொன்று அவரது சடலத்தை கடலில் புதைத்தது. ஆனால், இதனைப் பற்றி எவரும் கேள்வி எழுப்பவில்லை.

ஆனால், புலிகள் தொடர்பில் மட்டும் இவ்வாறான நிலைப்பாட்டைச் சிலர் கொண்டுள்ளனர்.

மேலும் வடபகுதியில் தமிழர் காணிகளைப் படையினர் ஆக்கிரமிப்பதாகக் கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறானது. தமிழ் மக்களின் காணிகளை இராணுவம் ஒருபோதும் ஆக்கிரமிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.