கள்ளக்காதலில் ஈடுபட்டால் கல்லால் அடித்துக் கொல்ல உத்தரவு..!

605

stoneதென்கிழக்காசிய நாடான புருனே இங்கிலாந்திடம் இருந்து கடந்த 1984–ம் ஆண்டில் விடுதலை பெற்றது. இங்கு மன்னர் சுல்தான் ஹஸ்சானஸ் போல்கியா (67) ஆட்சி நடத்தி வருகிறார்.

முஸ்லிம் நாடான இது எண்ணை வளம் நிறைந்தது. தற்போது இங்கு முஸ்லிம்களின் ஷரியத் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து புதிய விதி முறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி பாலியல் பலாத்காரம், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கள்ளக்காதலில் ஈடுபடுவோரை பொதுமக்கள் மத்தியில் வைத்து கல்லால் அடித்து கொல்லப்பட்டு மரண தண்டனை நிறை வேற்றப்படும். கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவோரின் கை விரல்கள் வெட்டி துண்டிக்கப்படும். மேலும் கருக்கலைப்பு, மது அருந்துதல் போன்றவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஷரியத் சட்டம் இன்னும் 6 மாதங்களில் கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான உத்தரவை மன்னர் சுல்தான் ஹஸ்சானஸ் போல்கியா பிறப்பித்துள்ளார்.