இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையில் ஊழல் – விமல் வீரவன்ச..!

773

vimalஇலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஊழல் நிறைந்த நிறுவனம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டுச் சபைக்காக செயற்படுத்திய கட்டுமான பணிகளுக்கு கொடுப்பனவுகள் இன்னும் செலுத்தப்படவில்லை எனவர் குறிப்பிட்டார்.

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, பொறியியலாளர் கூட்டுத்தாபனத்திற்கு ஒரு பில்லியன் ரூபா கடன் கொடுக்க வேண்டியுள்ளதாக விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் அதனை செலுத்தாது கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினர் தங்களுக்கு சம்பளம் அதிகரித்துக் கொண்டதாக அவர் ​தெரிவித்தார்.



இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய விமல் வீரவன்ச இவ்வாறு குறிப்பிட்டார்.