யாழ்ப்பாணம் நாவற்குழியில் இராணுவம் சிங்களவர்களுக்கு காணிகளை பகிரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக வடக்கு முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாவற்குழியில் குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்களுக்கு இராணுவம் காணிகளை பகிர்ந்தளித்துள்ளது.
இதனை மறைப்பதற்காக தமிழர்களுக்கும் காணிகளை பகிர்ந்தளிப்பதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.
இந்தநிலையில் காணிப்பகிர்வில் இராணுவத்தினர் ஈடுபடுவது சட்டத்துக்கு புறம்பான செயல் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தின் தலையீடு இல்லாமல் அதனை தீர்க்கமுடியாது என்று விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
வடமாகாணசபையின் முதலாவது செயலமர்வின் போது அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.





