ஜேர்மன் பிரதமரின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டதா அமெரிக்கா?

592

germanஜேர்மன் நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கெலின் தொலைபேசி உரையாடலை, அமெரிக்க உளவுத்துறை ஒட்டு கேட்பதாக தகவல் வெளியானது.

இதுபற்றி அவர் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம் புகார் தெரிவித்தார்.

இதனை அடுத்து ஒபாமா அவருடன் தொலைபேசியில் பேசி, உங்களுடைய தொலைபேசி ஒட்டு கேட்கப்படவில்லை. இனிமேலும் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதி அளித்தார்.

இந்த தகவலை வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் ஜாய் கார்னேய் நிருபர்களிடம் கூறினார். மேலும் வெளிநாட்டு தகவல்களை சேகரிக்கும் முறைகளை ஆய்வு செய்யவும் ஒபாமா உத்தரவிட்டு இருக்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.



இந்த பிரச்சினையால் அமெரிக்கா, ஜேர்மனி இடையேயான உறவு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டார்கள் எனவும் செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில் ஜேர்மனியில் உள்ள அமெரிக்க தூதருக்கு வெளியுறவு மந்திரி ´சம்மன்´ அனுப்பி இதுதொடர்பாக விளக்கம் கேட்டார்.