இளம்பெண்களை கடத்தி விபச்சாரத்தில் தள்ளிய நபர் கைது..!

514

arrestஇளம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் மொன்றியலை சேர்ந்தவர் Marius Trifu Miclescu (வயது 38).

இவர் ருமேனியாவை சேர்ந்த இளம்பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது உட்பட 15 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ருமேனியாவை சேர்ந்த விசாரணைப் பிரிவினர் கடந்த ஒரு வருடகாலமாக நடத்திய விசாரரைணகளை அடுத்து இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொன்றியலில் 350க்கும் மேற்பட்ட மசாஜ் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவை மொன்றியலின் தெற்கு மற்றும் வடக்கு கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ளன.

அத்துடன் இந்த பகுதிகளில் விபச்சாரம் ஒரு வர்த்தகமாக நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.