முதல் மனைவிக்காக இரண்டாவது மனைவியை கொலை செய்த கணவன் : சிக்கியது எப்படி தெரியுமா?

508

புதுடெல்லியில் முதல் மனைவியுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருந்த இரண்டாவது மனைவியை கொலை செய்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

சுரேஷ் சிங் (26) என்ற இளைஞர் கடந்த 2015ல் லதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அதே ஆண்டில் சாவித்ரி மெரா (30) என்ற பெண்ணுடன் சுரேஷுக்கு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இது பின்னர் காதலாக மாறிய நிலையில் சாவித்ரியை, சுரேஷ் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இரண்டு மனைவிகளையும் வெவ்வேறு ஊர்களில் தங்க வைத்த சுரேஷ் அவர்களுடன் குடும்பம் நடாத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்தாண்டு இரண்டாவது மனைவி சாவித்ரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரை பிரிந்து சென்ற சுரேஷ், லதாவுடனே நிரந்தரமாக வாழத் தொடங்கினார். ஆனால், சுரேஷை அடிக்கடி தொடர்பு கொண்ட சாவித்ரி, லதாவை பிரிந்து தன்னுடன் வாழ வருமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதையடுத்து சாவித்ரியை கொலை செய்ய முடிவெடுத்த சுரேஷ் கடந்த மாதம் 11ம் திகதி டெல்லி வீட்டில் வைத்து அவரை கொடூரமாக கொன்று சடலத்தை படுக்கை மெத்தை பெட்டியில் மறைத்து வைத்துள்ளார்.

அக்கம்பக்கத்தினர் மூலம் இதை கண்டுப்பிடித்த பொலிசார் சுரேஷ் வீட்டில் இருந்த சாவித்ரியின் சடலத்தை 29ம் திகதி கைப்பற்றினார்கள்.

இதையடுத்து தலைமறைவாக இருந்த சுரேஷை பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர்.