காதல் விவகாரத்தால் மகனை கொன்றுவிட்டனர் : சிசிடிவி ஆதாரங்களையும் அழித்துவிட்டதாக தாய் கண்ணீர்!!

720

தமிழகத்தில் மது அருந்தியதால் இறந்ததாக இளைஞர் கூறப்பட்ட நிலையில், காதல் விவகாரத்தால் என் மகனை அடித்து கொன்றுவிட்டனர் என்று தாய் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல்குமார்(24). சென்னை ஆர்.கே நகரில் ஊர்காவல் படையில் பணிபுரிந்த இவர் கடந்த 7ம் திகதி மர்மான முறையில் இறந்து கிடந்தார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்ட போது, மது அருந்தியதால் இறந்ததாகக் கூறி வழக்கை முடித்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நிர்மல்குமாரின் தாய் காதல் விவகாரத்தால் என் மகனை சிலர் அடித்து கொன்றுவிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், என் மகன் காதலித்த பெண்ணை இன்னொரு இளைஞரும் காதலித்ததாகவும், அதில் இருவருக்கும் பிரச்சனை இருந்து வந்தாகவும், சம்பவம் நடந்த அன்று அந்த நபர் நிர்மல்குமாரை அடித்து உதைத்த காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகளை பொலிசாருடன் சேர்ந்து அவர்கள் அழித்துவிட்டதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்.