வடபகுதி ரயில் சேவைக்காக இந்தியாவில் இருந்து இயந்திரங்கள் இறக்குமதி..!

878

trainவட பகுதிக்கான ரயில் பாதையில் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்காக இந்தியாவில் இருந்து 6 ரயில் இயந்திரங்கள் மற்றும் 78 ரயில் பெட்டிகளை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்தியாவின் கடன் யோசனை திட்டத்தின் கீழ் இதற்காக 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இறக்குமதி செய்யப்பட உள்ள ரயில் பெட்டிகளில் 12 பெட்டிகள் குளிரூட்டப்பட்ட பெட்டிகள் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வடக்கு ரயில் பாதையில் கிளிநொச்சி வரையான ரயில் சேவை அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குள் இந்த ரயில் சேவை காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட உள்ளது.

அதேவேளை எதிர்வரும் டிசம்பர் மாதம் தலைமன்னார் வரை ரயில் சேவைகளை ஆரம்பிக்க இலங்கை ரயில் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.