சென்னையில் குடிபோதையால் மாடியில் இருந்து விழுந்த நபரால் படுகாயமடைந்த சிறுமி தன்யஸ்ரீ தீவிர சிகிச்சை பெற்று குணமடைந்து வருகிறார்.
சென்னை தண்டையார்பேட்டையில் தன்யஸ்ரீ என்னும் 4 வயது சிறுமி ஒருவர், தனது தாத்தாவுடன் சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அருகில் இருந்த வீட்டின் 2வது மாடியில் குடிபோதையில் நபர் ஒருவர், சிறுமியின் மீது விழுந்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த தன்யஸ்ரீ, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தன்யஸ்ரீக்கு மூளையில் வீக்கமும், தண்டுவடம் மற்றும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. சிறுமியின் மருத்துவ சிகிச்சைக்கு பணமில்லாமல், சிறுமியின் பெற்றோர் தவித்த நிலையில் பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் குவிந்தன.
இந்நிலையில் சிறுமி தன்யஸ்ரீயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிறுமி தற்போது சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் அவளின் தந்தை ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், ‘சிகிச்சைக்கு உதவிய அரசு, ஊடகங்கள் மற்றும் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் நன்றி, இதைத் தவிர என்ன சொல்வதென்று எனக்கு தெரியவில்லை. தன்யஸ்ரீ விரைவில் குணமடைய உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் தேவை’ என தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..






