இன்னொரு ரீமேக் படத்துக்கு தயாராகும் விஜய்..!

428

vijayதெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற அத்தரின்டிக்கி தாரெதி என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் விஜய். சமீபத்தில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்த படம் இந்த ´அத்தரின்டிக்கி தாரெதி´.

இதில் பவன் கல்யாண் – சமந்தா ஜோடியாக நடித்திருந்திருந்தனர். தற்போது இந்தப் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

தெலுங்கு தயாரிப்பாளர் ஒருவர் தயாரிக்கிறார். படத்துக்கு இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை. பிரபு தேவாவின் பெயர் பரிசீலனையில் உள்ளது.

விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். விஜய்யுடன் அவர் ஜோடி சேர்வது இதுவே முதல் முறை. இந்த வேடத்துக்கு முதலில் பரிசீலிக்கப்பட்டவர் நஸ்ரியா என்பது குறிப்பிடத்தக்கது.



காவலன் படத்தை இயக்கிய சித்திக் இயக்கினால் நன்றாக இருக்கும் என விஜய் விரும்பினாலும், ஜான் ஆப்ரஹாம் நடிக்கும் ஹிந்திப் படத்தை சித்திக் இயக்க உள்ளதால் பிரபு தேவாவுடன் பேசி வருகிறார்களாம்.

விஜய்க்கும் தெலுங்குப் படங்களுக்கும் அப்படி ஒரு பிணைப்பு. அவரது பல படங்கள் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்றவைகளின் ரீமேக்தான் என்பது தெரிந்த விஷயமே.