இளம்பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வாடகை காதலன்!!

568

இந்தியாவில் காதலர் தினத்தின் போது காதலன் இல்லாத பெண்களுக்கு வாடகை காதலனாக வருவதாக வித்தியாசமாக யோசித்த இளைஞனின் செயல் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் குர்கான், இவர் கடந்த சனிக்கிழமை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் காதலர் தினம் வரும் 14ம் திகதி வருவதால், காதலன் இல்லாத பெண்களுக்கு வாடகை காதலனாக வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

அதில் அவர் தெரிவித்த நிபந்தனைகள்தான் அனைத்து பெண்களையும் அவர் பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

வாடகைக் காதலனாக வருவதற்கு 4 பக்கேஜுகள் தயாராக உள்ளதாகவும், அதற்கான கட்டணமும் அதில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.

அந்த பக்கேஜுகளில், டேட்டிங் செல்லும் பெண்கள் தன்னுடன் கைகோர்ப்பது, முத்தம் கொடுப்பது போன்றவைகளையும் குறிப்பிட்டுள்ளார். ஆடி காரில் இலவச பயணம், கரப்பான் பூச்சிகளிடம் இருந்து காதலியை காப்பாற்ற இயலாது, பேஷன் மற்றும் அழகு குறித்து வாய் திறக்க மாட்டேன், கடல் உணவுகளை உண்ணவே மாட்டேன் என்று பல நிபந்தனைகளை குறிப்பிட்டுள்ள அவர், இதற்குத் தயார் என்றால் டேட்டிங் செல்ல தானும் ரெடி என்று குறிப்பிட்டுள்ளார்.

இவருடைய இந்த பதிவை 3,500 மேற்பட்டோர் பகிர்ந்துள்ளார். 22,000க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.