அமெரிக்காவை எச்சரிக்கும் ஜேர்மனி!!

636

deதொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்பது தொடர்பாக அமெரிக்கா விளக்கம் அளிக்காவிட்டால் இப்பிரச்னையை அமெரிக்க உச்சி மாநாடு வரை கொண்டு செல்வோம் என ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் தொலைபேசி அழைப்புகளை அமெரிக்க உளவு நிறுவனம் ஒட்டுக் கேட்டதாக தகவல் கிடைத்தது. ஆனால் இந்த தகவலினை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஓபாமா மறுத்துள்ளார்.

மேலும் அமெரிக்க நாடானது பிறநாட்டு ரகசியங்களை வேவு பார்ப்பதாக எட்வர்ட் ஸ்னோடன் தகவல் வெளியிட்டதால் அந்நாடு பெரும் கோபத்திற்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுகுறித்து சரியான விளக்கம் அளிக்காவிட்டால் ஜரோப்பிய உச்சிமாநாடு வரை பிரச்சனை செல்லும் என்று மெர்க்கல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.