வவுனியாவில் புதையல் தோண்டிய ஐவருக்கு 8ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

648

courtவவுனியா – நெடுங்கேணி பிரதேசத்தில் சூடுவைத்தான் கிராமத்தில் புதையல் தோண்டிய ஐவரை நீதிமன்றத்தின் உத்தரவில் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைத்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்றபோது அங்கு ஐவர் புதையல் தோண்டும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாகவும், இதனையடுத்து அவர்களை கைது செய்ததுடன் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், துவிச்சக்கரவண்டி, மண்ணை தோண்டுவதற்கு பயன்படுத்தும் பொருட்களையும் தாம் மீட்டதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட ஐவரையும் வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய நிலையில் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவானால் உத்திரவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.