கமலின் பொதுக்கூட்டத்தில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்!!

556

கமலின் அரசியல் கட்சி ஆரம்ப விழா பொதுக்கூட்டத்தில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பிறந்தவர் தான் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து உலகநாயகனாக உயரும் அளவிற்கு வளர்ந்த கமல்ஹாசனின் தந்தை பெயர் சீனிவாசன்.

அரசியல் கட்சி துவக்க உள்ளதாக அறிவித்திருந்த கமல்ஹாசன், மதுரையில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தி தனது கட்சி பெயர் மற்றும் கொடி உள்ளிட்டவற்ரை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அந்த கூட்டத்திற்கு வந்திருந்த ஜக்கிரியா என்பவர் கூறுகையில், “கமல் தந்தை சீனிவானும் நானும் நெருங்கிய நண்பர்கள். கமல் நடிப்பதற்காக சென்னை சென்ற பிறகு அவர் படம் வெளிவரும் போதெல்லாம் சீனிவானிடம் சென்று சொல்வேன். அவர் உடனே படத்தை பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பதாக தெரிவிப்பார். சைக்கிள் கடை நடந்தி வந்த நான் அவரை சைக்கிளில் வைத்து படத்துக்கு அழைத்துச் செல்வேன்”.

பின்னர் காலங்கள் மாறிவிட்டன. சீனிவாசன் சென்னை சென்றுவிட்டார். அங்கிருந்து எனக்கு அவர் எழுதிய பல கடிதங்களை நான் இன்னமும் பத்திரமாக வைத்துள்ளேன்.

குறிப்பாக அவர் அனுப்பிய கமலுடனான அவரது புகைப்படம் இன்னமும் என்னிடம் இருக்கிறது என காட்டுகிறார், ஜக்கிரியா.

வாய் பேச முடியாத ஜக்கிரியா, கமல் தந்தையுடனான தனது நட்பு குறித்து தன் மனைவி ஜெரினா பேகம் உதவியுடன் நெகிழ்ச்சியோடு எடுத்து கூறியது குறிப்பிடத்தக்கது.