கமல்ஹாசனின் புதிய கட்சியில் உறுப்பினர்களான பிரபல நடிகர்கள் மற்றும் நடிகை!!

717

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினர்களின் பட்டியலில் பல பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நேற்று மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் 40 அடி உயர கட்சியைக் கொடியேற்றினார்.  பின்னர் தனது கட்சியின் பெயராக மக்கள் நீதி மய்யம் என்பதை அறிவித்தார்.

இதையடுத்து இந்த கட்சிக்கான உயர்மட்ட குழு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர். அதில் கமலுடன் பல திரைப்படங்களில் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீபிரியா, கமலின் விருமாண்டி, உத்தமவில்லன் திரைப்படங்களில் அவருடன் நடித்த பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதோடு நடிகர் நாசரின் மனைவி கமீலா, அடையாறு மாணவர் நகலகம் சவுரிராஜன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி மவுரியா, எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோரும் நிர்வாகிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பிக்பாஸ் புகழ் சினேகன், வையாபுரி ஆகியோரும் மேடையில் கமல் கட்சியில் இணைந்தார்கள்.