பரிசுப்பொருள் வெடித்து புதுமாப்பிள்ளை பலியான விவகாரம் : வெளியான திடுக்கிடும் தகவல்!!

705

பரிசுப்பொருள் வெடித்து புதுமாப்பிள்ளை பலியான நிலையில் அவருக்கு ஒரு ஆண்டுக்கு முன்னே போன் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேந்த சவுமியா சேகர் சாஹா (26) என்பவருக்கும், ரீமா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 18-ஆம் திகதி திருமணம் நடந்தது.

பின்னர் 21ம் திகதி நடந்த திருமண வரவேற்பில் பலர் புதுமண தம்பதிக்கு பரிசு பொருளை வழங்கினார்கள்.

இரண்டு நாள் கழித்து பரிசு பொருட்களை திறந்த நிலையில், அதிலிருந்த வெடிகுண்டு வெடித்ததில் சேகரும் அவர் பாட்டியும் உயிரிழந்தனர், ரீமா படுகாயமடைந்தார்.

இதுகுறித்து பொலிசார் விசாரித்து வந்த நிலையில் இளைஞர் ஒருவர் சேகரை ஒரு ஆண்டுக்கு முன்னரே போனில் மிரட்டியது தெரியவந்துள்ளது.