வீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான நுளம்பு குறித்து பரிசோதனை!!

579

mosquitoவீடொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான நுளம்பு குறித்து பரிசோதனைகளை மேற்கொள்ள வைத்திய பிரிசோதனை நிலையம் தீர்மானித்துள்ளது.

சாதாரண நுளம்புகளை விட பெரியளவான நுளம்பு ஒன்று காணப்பட்டதாக நேற்று வைத்திய பரிசோதனை நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதாக அந்நிலையத்தின் வைத்திய பரிசோதகர் அனில் சமரநாயக்க தெரிவித்தார்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டது நுளம்பா அல்லது வேறு ஏதும் உயிரினமா என பரிசோதனைகளின் பின்னரே அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

கலேவெல – மொரகொல்ல ரொடவெவ பிரதேச வீடொன்றிலிருந்து இந்த உயிரினம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் உரிமையாளர் அந்த உயிரினத்தை கண்டதும் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.