கணவரை கொடுரமாக குத்திக் கொலைசெய்த மனைவி கைது!!

665

knifஏமன் நாட்டில் கணவரை குத்திக் கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் சூர் நகரில் கேரளாவை சேர்ந்த ஹென்னி வர்கீஸ் என்பவர் தனது மனைவி நீனாவுடன் வசித்து வந்தார்.

அங்குள்ள இந்திய பள்ளியில் நீனா ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். ஹென்னிக்கு அதிகளவு குடிப்பழக்கம் இருக்கவே, இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும்.

இந்நிலையில் சம்பவதினத்தன்று பயங்கர கோபமடைந்த நீனா, ஹென்னியை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதுதொடர்பாக நீனாவை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து ஹென்னியின் சடலத்தையும் இவர்களது இரு குழந்தைகளையும் கேரளாவிற்கு அனுப்பி வைக்க இந்திய தூதரகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.