யானையைக் கண்டு பயந்து ஓடியவர் சடலமாக மீட்பு!!

608

திருகோணமலை கோமரங்கடவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலவெவ பகுதியில் வீதியோரத்தில் மீட்கப்பட்ட சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக உட்படுத்துமாாறு நேற்று மாலை திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் எம்.பீ.அன்பார் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கோமரங்கடவெல, 05ம் கட்டை பகுதியைச் சேர்ந்த ஆனந்தகே திலீப் ரஞ்சன (38வயது) என்பவருடையது என பொலிஸார் தெரிவித்தார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கோமரங்கடவெல பிரதேச சபை பெக்கோ இயந்திரத்தின் உதவியாளராக கடமையாற்றி வரும் குறித்த நபர், பதவியா, சிறிபுர பகுதியிலிருந்து கடமையை முடித்து விட்டு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் வரும் வேளை யானையைக் கண்டு பயந்து வீழ்ந்ததில் அவ்விடத்தில் உயிரிழந்திருக்கலாம் அல்லது முகத்தில் காயம் காணப்படுவதால் விபத்தினால் உயிரிழந்திருக்கலாமெனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

வீழ்ந்து கிடந்த இடத்திற்கு சென்ற நீதவான் சடலத்தை சட்ட பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சட்ட வைத்திய பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் கோமரங்கடவெல பொலிஸார் தெரிவித்தனர்.