முல்லைத்தீவில் மூன்று பிள்ளைகளின் தந்தை தீயில் எரிந்து உயிரிழப்பு!!

593

முல்லைத்தீவு – புதுகுடியிருப்பு பகுதியில் நபர் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 10ம் வட்டாரத்தில் வசித்துவரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான த.தர்மகுலசிங்கம் (49) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கு சொந்தமான வர்த்தக நிலையம் ஒன்றை, நபர் ஒருவர் தனக்கு சொந்தமாக்குவதற்காக ஏற்கனவே முயற்சித்துள்ள நிலையில் பொலிஸாரின் தலையீட்டினால் குறித்த வர்த்தக நிலையம் உயிரிழந்தவருக்கே சொந்தமாக வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த வர்த்தக நிலையத்திற்கு முன்பாகவே நேற்று இரவு 11 மணியளவில் தீயில் எரிந்து இவர் உயிரிழந்துள்ளார். இது தற்கொலையா அல்லது திட்டமிட்ட படுகொலையா என்னும் சந்தேகம் அப்பகுதியில் நிலவுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புதுகுடியிருப்பு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.