மனைவிக்கு பலவந்தமாக விஷம் கொடுத்த கணவன்!!

525

மனைவிக்கு பலவந்தமாக விஷம் கொடுத்த ஒரு பிள்ளையின் தந்தையை கண்டி, உடதும்பர பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

உடதும்பர உன்னஸ்கிரிய பம்பரபெத்த பிரதேசத்தை சேர்ந்த இந்த நபர், தெல்தெனிய பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பீ.ஜீ.அஜித் சமன் குமார என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பலவந்தமாக விஷம் கொடுக்கப்பட்டதால், ஆபத்தான நிலையில் இருக்கும்இவர் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவி தனது நண்பியுடன் உடத்தும்பர வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

மனைவி வைத்தியசாலையில் இருப்பதை அறிந்துக்கொண்ட சந்தேக நபர், வைத்தியசாலைக்கு சென்று மனைவியின் வாயை பலவந்தமாக திறந்து குப்பி ஒன்றில் வைத்திருந்த விஷத்தை வாயில் கொட்டியுள்ளதாக சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.