பறக்கும் விமானத்தில் குழந்தை பிரசவித்துள்ள வீட்டுப் பணிப் பெண்!!

611

Air Arabiaஇலங்கை வீட்டுப் பணிப்பெண் ஒருவர் பறக்கும் விமானத்தில் குழந்தை பிரசவித்துள்ளார். டுபாயிலிந்து கட்டுநாயக்க நோக்கிப் பயணம் செய்த எயார் அரேபியா விமானத்தில் பயணம் செய்த இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண் ஒருவரே இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ளார்.

விமானம் புறப்பட்டு இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் குறித்த கர்ப்பிணிப் பெண் பிரசவ வேதனையால் அவதியுற்றுள்ளார்.
இதனால் அருகாமையில் இருக்கும் விமான நிலையமொன்றில் விமானத்தை தரையிறக்கி அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டது.

எனினும் விமானம் தரையிறக்கப்படுவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னதாகவே குறித்த பெண் குழந்தையை பிரசவித்துள்ளார்.
விமானப் பணியாளர்களும், சக பயணிகளும் குழந்தையை பிரசவிப்பதற்கு உதவிகளை வழங்கியுள்ளனர்.

டுபாயில் பணியாற்றி வந்த இலங்கை வீட்டுப் பணிப் பெண் ஒருவரே இவ்வாறு பறக்கும் விமானத்தில் குழந்தையை பிறசவித்துள்ளார்.

விமானத்தை தரையிறக்கி தாயையும், சேயையும் ஓமான் வைத்தியசாலையில் அனுமதித்த விமானப் பணியாளர்கள் மீண்டும் இலங்கை நோக்கியப் பயணத்தைத் தெடர்ந்துள்ளனர்.