இலங்கையில் போலிக் கணக்குகள் கொண்ட பேஸ்புக் தொடர்பில் அதிக முறைப்பாடுகள்!!

1051

fbசமூக இணையத்தளமான பேஸ்புக் தொடர்பில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1050 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் இந்த முறைபாடுகள் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவின் ஊடகப் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்த தெரிவிக்கின்றார்.

அவற்றுள் போலிக் கணக்குகள் இயங்குகின்றமை தொடர்பிலேயே கூடுதல் முறைபாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த போலி கணக்குகள் குறித்து பேஸ்புக் இணையத்தள பக்கத்தில் முறைபாடு தெரிவிப்பதற்கான வசதி காணப்படுவதாகவும் அதன்மூலம் அத்தகைய கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்ககை எடுக்க முடியும் என்றும் இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு அறிவுறுத்தியுள்ளது.