நவம்பர் மாத ராசி பலன்கள் – மிதுனம்!!

751

mithunam

எந்தவொரு பெரிய பிரச்னையையும் கவனமாகக் கையாண்டு சிறியதாக மாற்றி அதில் வெற்றி காணுவீர்கள். இந்த மாதம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 5ல் சூரியன், சனி, ராகுவுடன் சேர்ந்து சஞ்சரிக்கிறார். இதனால் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூடவே பழகுபவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும்.

முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வீடு, மனை, வாகனம் ஆகியவற்றில் இருந்து வந்த இழுபறி நீங்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள். வெளிநாட்டிற்கு பயணம் செல்ல நேரிடலாம்.
புதிய ஓடர் விஷயமாக தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வெளியூர் செல்ல நேரிடும்.

பழைய கடன்களை வசூலிப்பதில் வேகம் காண்பீர்கள். புதிய கிளைகளை தொடங்க நினைப்பவர்கள் அதற்கான முயற்சியை தள்ளிப் போடுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக முக்கிய நபர்களை சந்திக்க வேண்டியிருக்கும். கொடுத்த கடனை திருப்பி வாங்க முயல்வீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவை கிடைக்கும்.

குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனமாகப் பேசுவது நல்லது. உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் முக்கிய விஷயங்களை குறித்து ஆலோசனை செய்வதையும், அடுத்தவரைப்பற்றி பேசுவதையும் தவிர்ப்பது நல்லது.
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வது நல்லது. வாகனத்தை ஓட்டும்போது கவனம் தேவை.

பிள்ளைகள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். அவர்களால் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களுக்கு எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். ரகசியங்களை மனதிலேயே தேக்கி வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் பாடங்களை படிக்கும் போது மனதை ஒருமுகப்படுத்தி படிப்பது நல்லது. கவனத்தை சிதற விடாமல் இருப்பது வெற்றிக்கு உதவும். சக மாணவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு லாபமான மாதமாக இது அமையும்.

பரிகாரம் : புதன் கிழமைகளில் நவகிரகங்களை வணங்கி புதனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது மன அமைதியை தரும். பொருளாதாரம் உயரும்.

சந்திராஷ்டமம் : 10, 11 திகதிகளில் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீபைரவாய நமஹ“ என்ற மந்திரத்தை 15 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : புதன் கிழமைகளில் பெருமாளுக்கு தேங்காயில் நெய் விளக்கு ஏற்றவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : புதன், வியாழன், வெள்ளி.
தேய்பிறை : புதன், வியாழன்.