நவம்பர் மாத ராசி பலன்கள் – கன்னி!!

412

kanni

எந்த விஷயத்தையும் எந்த நேரத்திலும் சோம்பலைத் தவிர்த்து தள்ளிப் போடாமல் உடனே முடிவு காண துடிக்கும் சுபாவமுடை யவர்கள். இந்த மாதம் தெளிவான சிந்தனை தோன்றும். எந்த காரியத் தையும் செய்யும் முன் தீவிரமாக ஆலோசனை செய்து அதில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். சாமர்த்தியமான உங்களது செயலைக் கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். முக்கிய நபர்கள், அந்தஸ்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். அதனால் கௌரவமும் அதிகரிக்கும்.

புதிய தொடர்புகள் மகிழ்ச்சி தரும். தொழில், வியாபாரம் தொடர்பாக புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதனால் நன்மை உண்டாகும். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்கள் சிறப்பாக பணிபுரிந்து உங்கள் நிலையை உயரச் செய்வார்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவார்கள். சக பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். அலுவலகம் மூலம் வாகனம் கிடைக்கலாம். என்றோ செய்த ஒரு வேலைக்கு இப்போது பாராட்டு கிடைக்கலாம்.

திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கு இடையே மனம் விட்டுப் பேசி எடுக்கும் முடிவுகள் குடும்பம் முன்னேற்றமடைய உதவும். பிள்ளைகளின் நலனின் அக்கறை காட்டுவீர்கள்.

பெண்கள், அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். தாயார் வழியில் அனுகூலம் உண்டு. மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு மற்றும் பொழுது போக்குகளில் ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு தகுந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த இழுபறியான வேலைகள் முடிவுக்கு வந்து சேரும்.

பரிகாரம் : புதன்கிழமைதோறும் ஐயப்பன் கோயிலுக்கு சென்று வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

சந்திராஷ்டமம் : 16, 17 திகதிகளில் புதிய வேலைக்கான ஒப்பந்தங்கள் எதிலும் கையெழுத்திட வேண்டாம்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் சம் சாஸ்தாய நமஹ“ என்ற மந்திரத்தை 14 முறை கூறுங்கள்.

சிறப்பு பரிகாரம் : துளசியை ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கவும். அவரின் அருளால் அனைத்து நன்மையும் நடக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வியாழன்.
தேய்பிறை  : திங்கள், புதன், வியாழன்.