நவம்பர் மாத ராசி பலன்கள் – தனுசு!!

432

thanusu

தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டு அனைத்து வேலைகளிலும் செயல்பட்டு வெற்றிகளை குவிப்பீர்கள். இந்த மாதத்தில் எடுத்த முயற்சிகள் யாவும் கூடும். வரவுக்கேற்ற செலவு இருந்து கொண்டேயிருக்கும். எதையுமே சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் உண்டாகும். மனோதைரியம் கூடும். செய்யாத தவறுக்கு மற்றவர்களால் குற்றம் சாட்டப்படலாம். எனவே, கவனம் தேவை.

கண்நோய், பித்தம், வாதம் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட்டு நீங்கும். தன, வாக்கு ஸ்தானாதிபதியான சனி உங்கள் ராசியைப் பார்ப்பதால் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திடீர் கோபம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் செலவுகள் அதிகரிக்கும். உங்களிடம் வேலை செய்பவர்களின் செயல்களால் உங்களுக்கு கோபம் உண்டாகும்.

நிதானமாக அவர்களிடம் பேசுவது நன்மையைத் தரும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்யோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்திலுள்ள சக ஊழியர்கள், மேலதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாகப் பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகை, குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும்.

அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் உண்டாகும். கவனமாக இருப்பது நல்லது. பெண்கள் யாருக்காவது வலிய சென்று உதவுவதன் மூலம் வீண்பழி ஏற்படலாம். கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் அன்றன்றைய வேலையை அன்றே முடிப்பது நல்லது.

பாடம் தொடர்பான சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு படிப்பது நல்லது. வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளையே பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகளும் வந்து சேரும்.

பரிகாரம் : வியாழக்கிழமையில் மஞ்சள் நிற மலரைச் சாற்றி தட்சிணாமூர்த்தியை வழிபடுவது கடன் பிரச்சனையை தீர்க்கும். செல்வம் சேரும்.

சந்திராஷ்டமம் : 23, 24 திகதிகளில் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீசத்குருநாதாய நமஹ“ என்ற மந்திரத்தை 12 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : விநாயகப் பெருமானுக்கு வியாழக்கிழமைதோறும் பழமாலை சாத்தி அர்ச்சனை செய்து வழிபடுவது காரியத் தடைகளை நீக்கும். செல்வமும் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வியாழன்.
தேய்பிறை  : திங்கள், புதன்.