நவம்பர் மாத ராசி பலன்கள் – கும்பம்!!

402

kumbam

அனைத்து விதங்களிலும் ஆதரவற்றவர்களை ஆதரிக்கும் குணமுடைய வர்கள் நீங்கள். இந்த மாதம் பொன், பொருள் சேரும். வாகனயோகம் கிட்டும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ராசியில் சஞ்சாரம் செய்யும் சுக பாக்யாதி பதியான சுக்கிரன் புதிய தொடர்புகளை ஏற்படுத்தித் தருவார். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும்.

ஆனால் ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்யும் சூரியன், சனி, புதன், ராகு ஆகியோர் திடீர் பயணங்களை ஏற்படுத்துவார்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நல்ல முன்னேற்றமும் இருக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் அனைத்து நல்லபடியாக முடியும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும்.

பங்குதாரர்களிடம் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிட்டும். கடினமான காரியங்களையும், திறமையாகச் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். தாய்வழி உறவினர்களோடு உறவு நல்ல நிலையில் நீடிக்கும். பெண்கள் சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை அதிகரிப்பார்கள். மனம் மகிழும்படியான நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். பாடங்கள் படிப்பது பற்றிய கவலை நீங்கும். புதிய நட்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். கலைத்துறையினர் எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது எச்சரிக்கையோடு இருக்கவும். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

பரிகாரம் : பிரதோஷ காலத்தில் சிவனை வணங்கி நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம் : 28, 29 திகதிகளில் இரவு நேரப் பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டாம்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீமங்களவாசினாய நமஹ“ என்ற மந்திரத்தை 9 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : முருகன் கோவிலில் உள்ள வேலுக்கு பாலபிஷேகம் செய்வது நன்மையைத் தரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, புதன், வியாழன்.
தேய்பிறை  : திங்கள், வியாழன்