நவம்பர் மாத ராசி பலன்கள் – மீனம்!!

428

meenam

தம்மைப் போலவே மற்றவர்களும் காலத்தை வீணாக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுவீர்கள். இந்த மாதம் பல வழிகளிலும் பணவரத்து இருந்து கொண்டேயிருக்கும். காரியத் தடைகள் நீங்கும். மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். ராசிக்கு 4ல் ராசிநாதனான குரு சஞ்சாரம் செய்வது எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியத்தை கொடுக்கும்.

பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகரிக்கும். வாக்குவன்மை பெருகும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். பழைய கடன்கள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும்.

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிட்டும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாகக் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். சுப காரியங்களில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். வாய்க்கு ருசியான இனிப்பு மற்றும் உணவு கிடைக்கும்.

பெண்கள் எடுத்த வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பெரியோர் மூலம் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். கல்வியில் வெற்றி பெறத் தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். கலைத்துறையினருக்கு கௌரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப்போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது.

பரிகாரம் : குருவிற்கு வியாழக்கிழமையில் கொண்டை கடலை நிவேதனம் செய்து வணங்குவதும் வருமானத்தை உயர்த்தும். மனதில் அமைதி பிறக்கும்.

சந்திராஷ்டமம்: 3, 4, 30 திகதிகளில் அலைச்சலும், காரியத்தடையும் இருக்கும்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீகுருப்யோ நமஹ“ என்று தினமும் சொல்லி வர மதிப்பும், மரியாதையும் கூடும்.

சிறப்பு பரிகாரம் : பிரதோஷத்தன்று பாலை அபிஷேகத்திற்கு கொடுக்கவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வியாழன்.
தேய்பிறை  : திங்கள், வியாழன், வெள்ளி