புதுக்குடியிருப்பு கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்பு!!

622

1புதுக்குடியிருப்பு பிரதேச கிணறு ஒன்றில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

70 அடி வரையிலான ஆழத்தையுடைய இந்தக் கிணறை நேற்று முன்தினம் இறைக்கும் போது பாவனைக்குட்படுத்தப்படாத T-56 ரக துப்பாக்கி ரவைகள் அடங்கியபெட்டி ஒன்றும், 50MM ரக துப்பாக்கி ரவைகளும் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டன.

பின்னர் குறித்த கிணற்றில் மேலும் ஆயுதங்கள் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின் பெயரில் இராணுவத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி நேற்று மாலை 3.00 மணியளவில் அந்தப் பகுதிக்கு வந்த இராணுவத்தினரும் உரப்பை ஒன்றினுள் துருப்பிடிக்காத படி ஒயில் பூசப்பட்ட நிலையில் வைக்கப்பட்டிருந்த T-56 ரக துப்பாக்கி ரவைகளை நீண்ட நேர முயற்சியின் பின் மீட்டனர்.

இந்தநிலையில் குறித்த பகுதியில் மேலும் பல வெடிபொருட்கள் இருக்கலாம் என மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.