இலங்கை மாநாட்டை புறக்கணிக்குமாறு மலேசிய பிரதமரிடம் கோரிக்கை..!

417

commonஇலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மலேசியா கடுமையான செய்தியை வெளியிடவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பக்காடான் ராக்யட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளனர்.

பக்காடான் ராக்யட் கட்சியின் பினாங் மாநில முதலமைச்சரான லிம் குவான் எங், பிரதம மந்திரி நஜீப் அப்துல் ரசாக்கிடம் விடுத்துள்ள கோரிக்கையின்படி இந்திய பிரதமரின் தீர்மானத்தை பின்பற்றவேண்டும் என்று கோரியுள்ளார்.

கொழும்பு மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் இலங்கைக்கு கடும் செய்தி ஒன்றை மலேசியாவினால் அனுப்பமுடியும் என்று குவான் எங் சுட்டிக்காட்டியுள்ளார்.



ஏற்கனவே நிறவெறிக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற மாநாட்டை மலேசியா புறக்கணித்தமையை குவான் கோடிட்டு காட்டியுள்ளார்.