பொதுநலவாயத்தில் எந்தவொரு நாடும் மற்றைய நாடு தொடர்பில் தீர்ப்பு வழங்கமுடியாது: ஜி.எல்.பீரிஸ்..!

572

glபொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் ஒரு நாட்டுக்கு இன்னொரு நாடு தீர்ப்பளிக்கும் உரிமை வழங்கப்படவில்லை என்று இலங்கை தெரிவித்துள்ளது.

கனடாவும் இந்தியாவும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை புறக்கணித்துள்ளமை தொடர்பிலேயே இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

எந்தவொரு நாடும் தீர்ப்பு வழங்கும் உரிமை பொதுநலவாயத்துக்குள் இல்லை என்று இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

பொதுநலவாய நாடுகள் அனைத்துக்கும் கொழும்பு மாநாட்டுக்கான அழைப்புக்கள் விடுக்கப்பட்டன.

அதனை ஏற்றுக்கொள்வதும் கொள்ளாமையும் குறித்த நாடுகளின் தீர்மானங்களை பொறுத்தவிடயமாகும் என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இந்த தகவலை அவர் வெளியிட்டார்.