ஆபரேஷன் தியேட்டரில் குத்தாட்டம் போட்ட நோயாளி (காணொளி)..!

546

patientஅறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு முன் பெண் நோயாளி ஒருவர் குத்தாட்டம் போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் டுபோக் சோகன் என்ற பெண் மார்பக கட்டியினால் பாதிக்கப்பட்டு சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் ஒரே நேரத்தில் 2அறுவை சிகிச்சைகளை நடத்த முடிவு செய்து அறுவைசிகிச்சை அரங்குக்கு கொண்டு சென்றார்கள்.

சிகிச்சை தொடங்க சில நிமிடம் இருக்கும் போது அவர் மருத்துவர்களிடம், தான் நடனம் ஆட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.



மருத்துவர்களும் அனுமதி அளித்ததுடன்,சோகனுடன் சேர்ந்து நடனமாடி உள்ளனர்.

இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையிலும் லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டதுடன், உடல்நலம் பெற வாழ்த்து தெரிவித்துள்ளனர்.