கடும் எதிர்ப்பால் கொழும்பு திரும்பிய செனல் 4 ஊடகவியலாளர்கள்..!

483

வவுனியா சென்று கொண்டிருந்த செனல் 4 ஊடகவியலாளர்கள் கொழும்பு திரும்பியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அவர்கள் வாகனம் ஒன்றின் ஊடாக கொழும்பு வந்துக் கொண்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

வவுனியா சென்று கொண்டிருந்த செனல் 4 ஊடகவியலாளர்களுக்கு அநுராதபுரத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

செனல் 4 ஊடகவியலாளர்கள் பயணித்த ரயிலை வழிமறித்த சிலர் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

இதனால் அதிக நேரம் ரயிலின் உள்ளேயே இருந்த செனல் 4 ஊடகவியலாளர்கள் பின்னர் கொழும்பு நோக்கி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

செனல் 4 ஊடகவியலாளர்கள் கொழும்பு வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

c41